இயற்கைஉணவோடு இணைந்து வாழ்வோம்

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.



நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.



ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும். விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.



தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.



தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.



கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும்.



தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.

0 Response to "இயற்கைஉணவோடு இணைந்து வாழ்வோம்"

Post a Comment